ரணில் விடுத்துள்ள பணிப்புரை! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Ranil Wickremesinghe Government Employee Sri Lanka
By Jenitha Mar 02, 2023 11:42 PM GMT
Report

நலன்புரி நன்மைகளை வழங்குவதற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கு தரவுக் கணக்கெடுப்பு - மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவு - துல்லியமான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்குமாறு விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தல்களின் கீழ் முன்னெடுக்கப்படும் நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில், தரவுகளை ஆராய்வதற்கான தரவு திரட்டல் நடவடிக்கை தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தப் பணிகள் மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

ரணில் விடுத்துள்ள பணிப்புரை! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Welfare Ranil Wickremesinghe Sri Lanka

உரிய திகதிக்கு முன்னர் தரவை வழங்க முடியாத விண்ணப்பதாரர்கள் நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் நலன்புரி நன்மைகள் சபை வலியுறுத்துகிறது.

நலன்புரி நன்மைகளை வழங்குவதற்காக தகுதியானவர்களை அடையாளங்காணும் திட்டத்தின், கீழ் தகவல்களை ஆய்வு செய்வதற்காக தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கள அதிகாரிகளுக்கு துல்லியமான தரவை துரிதமாக வழங்குமாறு அனைத்து விண்ணப்பதாரிகளிடமும் நலன்புரி நன்மைககள் சபை கோரியுள்ளது.

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் விதிகளின் கீழ் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதியுடைய அதிவிசேட வர்த்தமானி எண் 2302/23 மூலம் வெளியிடப்பட்ட 2022 ஆம் ஆண்டின் அமைச்சரவையினால் அனுமதிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க நலன்புரி நன்மைகளை வழங்குவதற்கான கட்டளைகள் திருத்தப்பட்டு வெளியிடப்பட்ட 2022 டிசம்பர் 15 திகதியிட்ட 2310/30 எனும் அதிவிசேட வர்த்தமானிக்க அமைய இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நலன்புரி நன்மகளுக்கு தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்களை கோரும் செயல்முறை ஏற்கனவே நிறைவுசெய்யப்பட்டுள்ளது.

ரணில் விடுத்துள்ள பணிப்புரை! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Welfare Ranil Wickremesinghe Sri Lanka

அதன்படி, பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 37,28139 ஆகும். இவற்றில், சரியான தரவுகளை 102,143 விண்ணப்பதாரிகள் வழங்கியுள்ளனர்.

நலன்புரி நன்மைகளை வழங்குவதற்காக தகுதியானவர்களை அடையாளங் காணும் திட்டத்தில் தகவல்களை ஆராய்வதற்கான தரவு சேகரிப்பு திட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கும் வகையில் 6728 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

3190 அபிவிருத்தி அதிகாரிகள் , 494 பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் , 205 கிராம உத்தியோகஸ்தர்கள் , 1127 வேறு அதிகாரிகள் மற்றும் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 1712 பேர் இதில் அடங்குவர்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு தேசிய அடையாள அட்டை அல்லது தேர்தல் பதிவு இலக்கம் அல்லது பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தோடு சிறுநீரக நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோர் மருத்துவ அறிக்கைகள், நீர் மற்றும் மின்சார கட்டணப் பட்டியல்களை சமர்ப்பிக்க முடியும்.

'' உண்மையை சொல்வோம்- சரியானவர்களுக்கு நன்மைகளை வழங்குவோம்'' என்ற தொனிப்பொருளின் கீழ் செயல்படுத்தப்படும் தரவு சேகரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் சரியான தரவுகளை வழங்கியதற்காக அறிவிப்பில் விண்ணப்பதாரிகள் கையொப்பமிடப்பட வேண்டும், மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் QR குறியீடு வழங்கப்பட இருப்பதோடு இந்த QR குறியீட்டைப் பயன்படுத்தி தாம் வழங்கிய தரவின் சுருக்கத்தை பார்வையிட முடியும்.   

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US