இலங்கை மக்களுக்கு விரைவில் கிடைக்கவுள்ள கொடுப்பனவு!அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான,விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18.04.2023) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“நிதி,பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நடைமுறைப்படுத்தப்படவுள்ள நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை பெறுவதற்கு ஜனாதிபதியின் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைக் கருத்தில் கொண்டு, வறுமையில் வாடுவோர் மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்தவர்கள் மற்றும் மிகவும் ஏழ்மையான சமூக குழுக்களுக்கு நலன்புரி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தனித்தனியான நலத்திட்டங்கள்

அத்துடன் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் தற்போது உதவி பயன்பெறும் முதியோர்களுக்கு தனித்தனியான நலத்திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் உத்தேச நலத்திட்டங்கள் (01-07-2023) திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மொத்த செலவு ஆண்டுக்கு சுமார் 206 பில்லியன் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.”என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri