மேலும் பலருக்கு இன்று கிடைக்கப்போகும் பணம்: மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் (08.09.2023) குறித்த அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 1550 மில்லியன் ரூபா இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டத்தில் மாத்திரம் 6 இலட்சத்து 89 ஆயிரத்து 803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டிருந்தது.
எனினும் எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் குறித்த ஒரு நாளில் இந்தக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாவது கட்டமாக மேலும் 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்துக்கான பணம் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் மேலும், குறித்த பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நாளைய தினம் வரவு வைக்கப்படும்.
ஆகஸ்ட் மாதத்திற்கான பணம்
நலன்புரி நன்மைகள் சபை கணக்குகளைச் சரிபார்த்த பிறகு மீதிப் பயனாளிகளுக்குப் பணம் செலுத்தப்படும்.
ஜூலை மாதத்திற்கான பணம் செலுத்திய பிறகு அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான பணத்தை செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |