கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் வரவேற்கும் நிகழ்வு
கிளிநொச்சி நகர் சித்தி விநாயகர் ஆலய வழிபாட்டினைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் தங்கபாண்டி ஞானராஜ் தலைமையில் உறுப்பினர்களை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.
தேசிய கொடியேற்றலை தொடர்ந்து பிரதேச சபையின் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.தொடர்ந்து பிரதேச சபையின் புதிய கேட்போர்கூடத்தில் நிகழ்வு நடைபெற்றது.
வரவேற்கும் நிகழ்வு
37 உறுப்பினர்களைக் கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக 20உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 06உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 04உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சார்பாக 02 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 02 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக 01 உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பாக 02 உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கன்னியமர்வு
கிளிநாச்சி- பூநகரி பிரதேச சபையின் கன்னியமர்வானது சர்வ மத வழிபாடுகளுடன் இன்று (02)ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.
இன்று பகல் 9 மணிக்கு முன்னதாக பூனகரி வாடியடியில் அமைந்துள்ள முனியப்பர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பூநகரி வாடியடி அடைக்கல மாதா தேவாலயத்திலும் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்றத்தையடுத்து தொடர்ந்து முதன்மை விருந்தினர் உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதையடுத்து சபை அமர்வு ஆரம்பமாகியது.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் பொன்னவெளி வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சிவகுமார் ஸ்ரீறஞ்சன் பூநகரி பிரதேச சபையினுடைய தவிசாளராகவும் நல்லூர் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய குலவீரசிங்கம் குணலட்சுமி உப தவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியானது அறுதிப் பெரும்பான்மையுடன் வடக்கு மாகானத்தில் முதலாவது அமர்வினை இன்று ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதில் பூநகரி பிரதேச சபையினுடைய தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சி ஆதரவாளர்கள் கொண்டிருந்தனர்.
சத்தியப்பிரமாண நிகழ்வு
சுயேச்சைக் குழு.01(தந்தை செல்வா தமிழ் அரசு), பூநகரி பிரதேச சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் திரு.க.கண்ணதாசன் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று(01) மாலை, தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டப் பணிமனை அறிவகத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தலைமையில் மாவீரர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் சமூக பொறுப்போடு மக்களுக்கான சேவையை வழங்குவேன் என்று சத்தியப்பிரமாணம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



