சுவீடன் சென்ற அநுரவுக்கு சிறப்பு வரவேற்பு
சுவீடன் சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை இன்று (27) காலை சென்றடைந்தபோதே குறித்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமைஇலங்கையிலிருந்து சுவீடனுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
சினேகபூர்வமான ஒன்றுகூடல்
இந்நிலையில், சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக கடசி வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
அதன்படி, இன்று சுவீடனில் NACKA AULAஇல் மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
