வீரவிலவில் கைதியொருவர் மான் தாக்கி மரணம்
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த கைதியொருவர் மான் தாக்கி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைதி திறந்தவெளி சிறைச்சாலை முகாமையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் மான் ஒன்று தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த கைதி தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வராபலான பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் ஓருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த கைதியின் சடலம் தெபரவவெ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றைய தினம் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் வீரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.