யாழில் ஊரடங்கு நேரத்தில் நடத்தப்பட்ட திருமணம்! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
யாழ், அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கோவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து , நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணித்தனர்.
அத்துடன், மணமகன், மணமகள் இருவருக்கும் அவர்களுடன் நெருக்கமான உறவினர்களுக்கும் கோவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார மருத்துவ அதிகாரியிடம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார கட்டுப்பாடுகளை மீறி திருமண வைபவத்தை ஒழுங்கு செய்தவர்கள் மீது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யபட்டுள்ளது. அதனால் அவர்களை வரும் 15ஆம் திகதி நீதிமன்றில் முற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அச்சுவேலி பொலிஸார் கூறினர்.
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam