யாழில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையதளங்கள் அங்குரார்ப்பணம்
யாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்களை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு வடமாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் நேற்றைய தினம் (10.01.2024) புதன்கிழமை நடைபெற்றுள்ளது.
அதன்போது, வேலணை, வலிகாமம் மேற்கு, நெடுந்தீவு, வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பிரதேச சபைகளுக்கும், பருத்தித்துறை நகர சபைக்குமான உத்தியோகப்பூர்வ இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.
மேம்படுத்தல் ஆலோசனைகள்
மக்களுக்காக சேவை புரியக்கூடிய உள்ளூராட்சி நிறுவனங்கள் இவ்வாறு உத்தியோகபூர்வ இணையத்தளங்களின் ஊடாக தங்களின் பணிகளை மேற்கொள்ள எடுத்துள்ள முயற்சிக்கு பி.எஸ்.எம். சார்ள்ஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், பொதுமக்கள் தங்களுக்கான சேவைகளை இணையத்தினூடாக பெற்றுக்கொள்வதற்கு தேவையான வசதிகளையும், வரி உள்ளிட்ட கட்டணங்களை இணையதளத்தினூடாக செலுத்துவதற்கான வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |