கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களுக்காக ரணில் ஆரம்பித்துள்ள இணையத்தளம்!
பிரதமர் அலுவலகம் விசேட இணையத்தளமொன்றை ஆரம்பித்துள்ளது.
இதன் மூலம் கோட்டகோகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது முன்மொழிவுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் சமர்ப்பிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இணையத்தளம்
pmoffice.gov.lk என்ற இணையத்தின் ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்புகளை மேற்கொள்ளமுடியும். நடைமுறை மற்றும் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை முன்வைப்பவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
காலி முகத்திடலுக்கு சென்ற குற்றப்புலனாய்வு பிரிவினர்
இதேவேளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலர் இன்று காலி முகத்திடலில் உள்ள 'கோட்டகோகம' போராட்டத் தளத்திற்கு சென்று மே 9 தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது போராட்டக்காரர்களிடம் வாக்குமூலங்களையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்..