பிரதமர் ஹரிணிக்கு எதிராக தேரரின் பரபரப்பான குற்றச்சாட்டு
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்த நாட்டில் கல்விச் சீர்திருத்தம் என்ற பெயரில் தேசத்துரோக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
அதனால் அவர் இந்த நாட்டுக்கு தேசத்துரோகி பெண்ணாவார் என அனுகல்லே சிறி ஜினானந்த தோரோ(Angulugalle Siri JinanandaThero) தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் மாநாடு நேற்று கொழும்பு 07ல் அமைந்துள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றும்போதே இதனை தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
சிங்கள பௌத்த நாட்டில் என்ன நடக்கிறது
இந்த நாடு சிங்கள பௌத்த இராச்சியமாக பல நுற்றாண்டுளாக நடைமுறையில் இருந்து வருகிறது.அவ்வாறான ஒரு நாட்டிற்கு பிரதமர் LGBTQ ஊக்குவிப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறார்.
அவர் கல்வி அமைச்சு மற்றும் பிரதமர் பதவிகளை அரச சார்பற்ற நிறுவனங்களின் மில்லியன் கணக்கான டொலர் பணத்தின் அழுத்தங்களால் வழங்கப்பட்டுள்ளது.இவர் வெளிநாட்டின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி இந்நாட்டின் கலாசாரம் மற்றும் ஒருமைப்பாட்டை குழி தோண்டி புதைப்பதற்கான திட்டங்களை தீட்டியுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி கண்டியில் மகாநாயக்க தேரர்களிடம் LGBTQயை ஊக்குவிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அன்றே கண்டி வைத்தியசாலையில் பாலியல் மாற்று சத்திர சிகிச்சைக்கான தொகுதியை ஆரம்பித்து வைக்கிறார்.

மேலும் LGBTQ ஊக்கிவிப்பு செயற்பாடுகள் அரசின் அனுசரணையில் கொண்டு செல்லப்படுகிறது. அத்தோடு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்புக்கு அதை ஊக்கிவிப்பதற்காக டொலர் மில்லியன் கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி மறுசீரமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான தேசத்துரோக செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணையுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.