இலங்கையை சூழ வளிமண்டலத் தளம்பல் நிலை: தயவு செய்து அவதானமாக இருக்குமாறு அவசர எச்சரிக்கை
கன மழை தொடர்பில் நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முதலாம் இணைப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்மலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்திற்கான வானிலை நிலரவம் தொடர்பில் இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மேலும்,
சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
பனிமூட்டமான நிலை
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan