காலநிலை தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் சூரியன் நேரடியாக உச்சம் கொடுப்பதால் அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் அதிக வெப்பமான காலநிலை மே இறுதி வாரம் வரை நீடிக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் காற்றின் ஓட்டம் குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரித்திகா ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
வானம் மேகமூட்டமின்றி காணப்படுவதாலும் சூரிய ஒளி நேரடியாக தரையில் படுவதாலும் மக்கள் அதிக வெப்பமான காலநிலையை உணருவார்கள் எனவும் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, சூரிய ஒளி குறைவான இடத்தில் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

உக்ரைன் போரை முடிக்க ஐரோப்பிய நாடுகளின் புதிய திட்டம்: Buffer Zone யோசனைக்கு ஜெலென்ஸ்கி மறுப்பு! News Lankasri
