சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படை விசேட நடவடிக்கை
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையை நேற்றைய தினம் வான்வழியூடாக அவதானித்ததன் பின்னர் விமானம் மற்றும் மீட்பு பணியாளர்களை பாதிக்கப்பட்ட இடங்களுக்க அனுப்புவதற்கு இலங்கை விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதகமான காலநிலையை கருத்திற் கொண்டு, அவசர உதவிகளை வழங்குவதற்கும் மக்களை மீட்பதற்கும் விமானம் மற்றும் உரிய பணியாளர்களை தயார்படுத்துவதற்கு விமானப்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, தென் மாகாணத்தை பாதிக்கும் அனர்த்த நிலைமையை வான்வழி கண்காணிப்பு நேற்று விமானப்படைக்கு சொந்தமான Y12 விமானத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
மோசமான காலநிலை
மேலும், மோசமான காலநிலை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேசத்தில் அவசர நிலைமை ஏற்பட்டால், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 412 ஹெலிகொப்டர் மற்றும் விமானப்படை ரெஜிமென்ட்டின் சிறப்புப் படை வீரர்கள், மக்களை மீட்பதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராசபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
