குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து மார்ச் 18ஆம் திகதி முற்பகல் 08.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது.
அது தொடர்ந்தும் கிழக்கு - வடகிழக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மார்ச் 20ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதி கடற்பரப்புகளில் (03S - 11N, 88E – 96E) மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடலில் பயணம் செய்வோரும், கடற்தொழிலாளர்களும் இவ்விடயம் குறித்து வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
