தொடரும் விபத்துக்கள்: சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக சாரதிகளை அவதானமாக செயற்படுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் தொடர்ந்தும் விபத்துகள் இடம்பெறுகின்றன.
அந்த வகையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (12) அதிகாலை கோழிகளை ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் சிக்கிய மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்ததோடு கோழிகளை ஏற்றிவந்த வாகனத்தில் பயணித்தோரும் காயமடைந்துள்ளனர்.
விசாரணை
இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் விபத்துக்கள் அடுத்தடுத்து பதிவாகும் நிலை காணப்படுவதால் காலநிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் திறக்கப்படும் வான்கதவுகள்.. மட்டக்களப்பு உட்பட பல பகுதிகளில் நிரம்பிவழியும் நீர்த்தேக்கங்கள்


புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam