வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் 23.10.2025 அன்று உருவாகும் என கணிப்பிடப்பட்டிருந்த தாழமுக்கம் எதிர்வரும் 21.10.2025 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டின் நெல்லூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தற்போதைய நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது வலுக்குறைந்த புயலாக கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
உருவாகவுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையின் எந்த பகுதிக்கும் நேரடியான பாதிப்புக்கள் இல்லை. ஆனாலும் எதிர்வரும் 21.10.2025 முதல் 25.10.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்துடன், எதிர்வரும் 21.10.2025 முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை, தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை மாத இறுதிவரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



