கருணா புலிகள் பிளவு - மறைக்கப்பட்ட சில உண்மைகள்: மனம் திறந்த நிராஜ் டேவிட்
கிழக்கில் தான் ஊடகவியலாளராக பணிபுரிந்த போது எதிர்பாராத நேரத்தில் இந்த கருணா-புலிகள் பிளவு ஏற்பட்டதாக ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
ஐபிசிதமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் மனம் திறந்து பேசிய அவர்,
பிளவின் பின்னர் சில விடயங்களை தொகுத்து பார்க்கின்ற போது சில காலங்களாகவே பிளவுக்கான சமிக்ஞைகள் வெளிவந்ததை மீட்டுபார்க்க கூடியதாக இருந்தது.
பிளவிற்கு ஒருவருடத்திற்கு முன்பாகவே விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுபிரிவின் பொறுப்பாளர் பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு வந்து சென்றதாக அறியமுடிந்தது.
அந்த நேரத்தில் புலனாய்வுபிரிவில் பொட்டமானின் கீழ் பணிபுரிந்த கிழக்கு மாகாணத்தின் அத்தனை போராளிகளும், அவருக்கு கீழ் செயற்பட முடியாது என்று கூறி கருணாவின் கீழ் செயற்பட்ட சம்பவம் பதிவாகியது.
இது தொடர்பில் பல கேள்விகள் கேட்கப்பட்ட போதும் சரியான பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
இவ்வாறு கருணா-புலிகள் பிளவின் மறைக்கப்பட்ட உண்மைகளை மனம் திறந்து பேசிய முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...



