மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த அழுத்தப் பிரதேசம்: சூறாவளியாக விரிவடையும் சாத்தியம்
நாட்டின் சில மாகாணங்களில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், ஊவா, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் இன்று காளை வேளையில் பனி மூட்டத்தை அவதானிக்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ளதாகவும், அது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே ஆழம் கூடிய மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட லட்சுமி ப்ரியா... காரணம் என்ன, ஷாக்கில் ரசிகர்கள் Cineulagam
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட லட்சுமி ப்ரியா! அதிர்ச்சியிக் ரசிகர்கள் Manithan
சரவணன் பற்றி அஞ்சலிக்கு தெரிய வந்த உண்மை, இனி நடக்கப்போவது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam