சூரியன் இன்றைய தினம் உச்சம் கொடுக்கவுள்ள பகுதிகள் குறித்து வெளியாகியுள்ள தகவல்
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்பில் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
வடமேல் மாகாணத்தில் பல இடங்களில் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் பாலம்பிட்டி, ஓமந்தை மற்றும் ஈரமடு ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan