அடுத்த 24 மணி நேரத்திற்கு காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்திற்கு நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகள் பெரும்பாலும் மழையற்றதாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் கொந்தளிப்பு
காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் (30-40) கி.மீ. வேகத்தில் இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது (45-50) கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
களுத்துறையிலிருந்து கொழும்பு மற்றும் புத்தளம் வழியாக மன்னார் வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் கடல் அவ்வப்போது சற்று கொந்தளிப்பாக இருக்கும்.
நாட்டை சுற்றியுள்ள பிற கடல் பகுதிகள் மிதமான கொந்தளிப்பாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.