அடுத்த 24 மணிநேரத்தில் கடலோரப்பகுதிகள் கொந்தளிப்பாக மாறக்கூடும்..! அவசர அறிவுறுத்தல்
இலங்கையின் வடகிழக்கில் நிலைப்பெற்றுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி தொடர்ந்தும் நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மற்றும் மழைப்பொழிவு அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவுரைகளைக் கவனத்தில்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, புத்தளம் மற்றும் கொழும்பு முதல் காலி வரையிலான கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

மாலை அல்லது இரவு நேரங்களில் நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேலும், தென்மேற்கிலிருந்து காற்று வீசும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 25-35 கி.மீ. ஆக இருக்கும். காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு சுமார் 50-55 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் பகுதிகள் கொந்தளிப்பு
காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாகவும், நாட்டை சுற்றியுள்ள பிற கடல் பகுதிகள் சற்றே கொந்தளிப்பாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது, அந்தக் கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், அப்போது அந்த கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! விதிக்கப்படவுள்ள தடை உத்தரவுகள்