வானிலை முன்னறிவிப்பு: பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்க்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்றைய தினம் (03.06.2023) மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை
இதேவேளை வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பலத்த காற்று
நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
