தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழமுக்கம் - எதிர்வரும் 24ஆம் திகதி புயல் சின்னமாக மாறும்
தென் மேற்கு வங்க கடலுக்கு அருகில் வளிமண்டலத்தில் காணப்படும் காற்றழுத்த தாழமுக்கம் எதிர்வரும் 24 ஆம் திகதி புயல் சின்னமாக மாற்றமடையலாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த தாழமுக்கமானது இன்றைய தினம் குறைந்த காற்றழுத்த தாழமுக்கமான மாறும். அத்துடன் இந்த குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் எதிர்வரும் 24ஆம் திகதி புயல் சின்னமாக மாறும் என்றே வளிமண்டலவியலாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கைக்கு இது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்தியாவுக்கே நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புயல் சின்னம் எதிர்வரும் 26 ஆம் திகதி இந்தியாவின் கரையை கடக்கலாம்.
இந்த நிலைமை காரணமாக இலங்கையில் அவ்வப்போது மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.
இதனால், குறித்த கடற்பரப்புக்குள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நிலைமையால் இலங்கையின் தென்மேற்கு பகுதிகிளல் 24, 25, 26ஆம் திகதிகளில் மழை அதிகரிக்கலாம்.
ஒரு நாள் தொடர்ந்தும் மழைப் பெய்தால், வெள்ளம், மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படலாம்.
குறிப்பாக காலி, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் இந்த நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அத்துல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
