மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மேலும் காலி முதல் மாத்தறை வழியாக பொத்துவில் வரையிலான கடற்பரப்பிலான பயணங்களை அவதானத்துடன் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலவிய தாழமுக்க நிலைமை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சூறாவளி எச்சரிக்கை
வளிமண்டலத்தில் நிலவி வரும் அசாதாரண நிலைமையானது எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையானது நாளைய தினம் சூறாவளி காற்றாக மாறக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கும் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.