மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேல் குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையும் சாத்தியம்
மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக அக்டோபர் 21ஆம் திகதியிலிருந்து ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, கடலில் பயணம் செய்வோரும், கடற்தொழிலாளர்களும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி அம்பலப்படுத்தும் விடயம்
காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2 மணிக்குப் பின் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பலத்த மழைவீழ்ச்சி
ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மயிலத்தமடு பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவார்கள்..! சுகாஸ் கேள்வி


தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 16 மணி நேரம் முன்

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri
