சீரற்ற காலநிலை - வெவ்வேறு பகுதிகளில் பதிவாகியுள்ள பாதிப்பு
தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் பெய்த கனமழையுடனான காற்றினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் இன்று (17) காலை இடம்பெற்றுள்ளது.
தம்பலகாமம் பிரதேச பகுதியின் கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர், வடக்கு மற்றும் பாரதிபுரம் உட்பட பல இடங்களில் உள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் கட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி
தற்பொழுது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளில் கரு மேகம் சூழ்ந்து மந்தமான வானிலை நிலவியதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார்
மன்னாரில் இன்று (17) காலை வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 6 மணி அளவில் கடும் காற்று வீசியதுடன் மழையும் பெய்துள்ளது.
இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் மின்தடை ஏற்பட்ட நிலையில் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.
மேலும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் பேசாலை கிராம மீனவர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இன்றைய தினம் (17) காலை கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரை திரும்பியுள்ளனர்.
மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட டோலர் படகுகள் மற்றும் கண்ணாடி இழை படகுகள் காற்றில் சிக்கிய நிலையில் கரையில் ஒதுக்கப்பட்டது. இதனால் படகுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.









உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
