நாளை வரை செல்லுபடியாகும் வகையில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தென்மேற்கு பருவ மழை தொடங்கும் வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதிகூடிய வெப்பநிலை முல்லைத்தீவில்
இந்த எச்சரிக்கை நாளை வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய வெப்பநிலையாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது, இது 37.3 பாகை செல்சியஸ் ஆகும்.