குச்சவெளியில் சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்ட வீடொன்றின் கூரை
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் ஏற்பட்ட கடும் சுழல் காற்றினால் தனியார் கல்வி நிலையத்துடன் இணைந்த வீடொன்று நேற்று (24) மாலை சேதமாக்கப்பட்டுள்ளன.
குச்சவெளி அந்நூரியா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள இக்ரா தனியார் கல்வி நிலையம் மற்றும் வீடு இதன்போது சேதமாகியுள்ளது.
உபகரணங்கள் சேதம்
இதில் வீட்டின் கூரைகள் காற்றினால் வீசப்பட்டோடு உபகரணங்களும் சேதமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டு உரிமையாளரின் மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை காயமடைந்துள்ளதாகவும் ஏனைய இருவரையும் குறித்த அனர்த்தத்தில் இருந்து மீட்டெடுத்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
கனமழை
கடும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் உட்பட வீட்டு தளபாடங்கள் மின்சார உபகரணங்களும் சேதமாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு உள்ளிட்ட தொடர்பான அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.







வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர்! சிதைந்த அமெரிக்க கனவு..சிக்கிய கடிதம் News Lankasri