இடியுடன் கூடிய மழை! வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டமான நிலை
எனவே இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்தோடு, மேல், வடமேல், தென் மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 4.00 மணிக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டது. இதன்படி இன்று (25) மாலை வரை அந்த அறிவுறுத்தல் நடைமுறையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையின்படி, “இன்றைய வெப்பநிலை நிலையின் கீழ், நீண்ட நேர செயல்பாட்டின் மூலம் சோர்வு சாத்தியமாகும், அதே நேரத்தில் தொடர்ந்து செயல்படுவதால் வெப்ப பிடிப்புகள் ஏற்படலாம். எனவே, பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும்,
முடிந்தவரை அடிக்கடி நிழலில்
ஓய்வெடுக்கவும் மற்றும் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும்
அறிவுறுத்தப்படுகிறார்கள். இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை
அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ” என கூறப்பட்டுள்ளது.