லிந்துலையில் இடி மின்னல் தாக்கம்: தீப்பிடித்த மின் இணைப்புப் பெட்டி
லிந்துலை - ஹோல்றீம் கொனன் தோட்டத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்துள்ளது.
நேற்று (09.11.2026) மாலை சுமார் 5:40 மணியளவில் இந்த இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வீட்டின் முன் பகுதியில் காணப்பட்ட மின் இணைப்புப் பெட்டி முழுமையாக தீப்பிடித்துள்ளதகவும் வீட்டின் கூரை தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்
மேலும் வீட்டினுள் இருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அனைத்து மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாகவும், துணிகள் மற்றும் இதர பொருட்களும் தூக்கி வீசப்பட்டும் சில எரிந்து சேதமடைந்துள்ளன.
சம்பவம் நடக்கும் போது வீட்டில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து கிராம உத்தியோகத்தர் பாதிக்கப்பட்ட வீட்டுக்குச் நேரில் சென்று சேத விபரங்களைப் பார்வையிட்டதுடன், பாதிப்புகள் தொடர்பான தகவல்களையும் சேகரித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



