நாட்டு மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு நிலையம் இன்று (17) வெளியிடப்பட்ட அறிவிப்பில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வெப்பமான வானிலை நாளை (18) வரை நீடிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வானிலை ஆய்வு நிலையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |