வத்தளையிலுள்ள பாடசாலையொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
வத்தளையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரின் அறையில் இருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது டி 56 ரக துப்பாக்கியொன்றும், 04 மெகசின்கள் மற்றும் 9 MM ரக 18 தோட்டாக்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட ஆயுதங்கள்
இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவிற்கு சொந்தமான தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது ஆயுதங்களுடன் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam