இரத்மலானையில் பெரும் தொகை வெடிபெருட்கள் மீட்பு
இரத்மலானையில் உள்ள ஒரு கொங்கிரீட் உற்பத்தி நிறுவனத்தின் தங்கும் விடுதியில் பெரும் தொகையான வெடிபெருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்டுள்ள கத்திகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதில் தங்கியிருந்த இரண்டு ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் ஒருவர் முன்னாள் இராணுவ கமாண்டோ வீரராவார்.
கைப்பற்றப் பொருட்கள்
கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழு T-56 தோட்டாக்கள், இரண்டு T-56 வெற்று ஷெல் உறைகள், ஒரு T-56 பயிற்சி தோட்டா, 9 மிமீ 17 வெடிமருந்துகள், இரண்டு கூர்மையான கத்திகள் மற்றும் ஒரு சைக்கிள் சங்கிலி ஆகியவை.
சந்தேக நபர்கள் பணிபுரியும் கொங்கிரீட் நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் தங்கியுள்ள தங்குமிடத்தை வருடத்திற்கு பல முறை பரிசோதனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, நேற்று பரிசோதித்த போதே இந்த ஆயுதங்கள் மற்றும் கத்திகள் சந்தேக நபர்களின் அலுமாரிகளில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri