கருப்பு பணத்தில் ஆயுதம் வாங்கிய விவகாரம்! - பசில் வழங்கிய பதில்
இலங்கையின் இறுதிக் கட்ட போரின் போது கறுப்பு பணத்தைக் கொண்டு வடகொரியாவிடம் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாக அண்மையில் ஞாயிறு பத்திரிகையொன்றுக்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆயுதக் கொள்வனவு தொடர்பில் நேற்றைய தினம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.
ஊடகவியலாளர்: அமைச்சரே, கறுப்பு சந்தையின் ஊடாக போரின் இறுதி கட்டத்தில் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை கெளர்வனவு செய்த்தாக நீங்கள் அண்மையில் பத்திரிகையொன்றுக்கு கூறியிருந்தீர்கள்? உண்மையில் என்ன நடந்தது?
நிதி அமைச்சர் பசில்: சர்ச்சைக்குரிய விடயங்களை நாம் எழுப்பாதிருப்பதே நல்லது. ஏனெனில் போர் காலத்தில் இடம்பெற்ற விடயங்களை சொல்வது கடினம்.
ஊடகவியலாளர்: இல்லை உங்களது கருத்தில் சர்ச்சைக்குரிய நிலைமை காணப்படுகின்றது.
நிதி அமைச்சர் பசில்: நீங்கள் இன்னமும் சர்ச்சையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றீர்கள்.
ஊடகவியலாளர்: இந்த சர்ச்சையை தீர்த்துக்கொள்ளவே முயற்சிக்கின்றோம்.
நிதி அமைச்சர் பசில்: அது தேவையில்லை என்று சொன்னால் போதுமல்லவா? என அமைச்சர் பசில் ராஜபக்ச சிரித்துக்கொண்டே பதிலளித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் வடகொரியாவிடமிருந்து ஆயுதங்கள் எதனையும் கொள்வனவு செய்யவில்லை எனவும் நிதி அமைச்சர் அவ்வாறான கருத்தை வெளியிடவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், நிதி அமைச்சர் பசில் மீண்டும் இந்த விடயம் குறித்து பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.