தொற்று நோய் காலத்தில் 10 பணக்காரர்களின் செல்வம் இரட்டிப்பாக அதிகரிப்பு
கோவிட்-19 வைரஸ் தொற்று காலத்தில் உலகில் உள்ள செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறியுள்ளதுடன் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒக்ஸ்பார்ம் (Oxfam) தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகில் 10 செல்வந்த நபர்களின் ஒட்டுமொத்த செல்வம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
எனினும் குறைந்த வருமானம் காரணமாக தினமும் 21 ஆயிரம் மக்கள் மரணடைவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. ஒக்ஸ்பார்ம் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளது.
ஒக்ஸ்பார்ம் நிறுவனம் வழமையாக டாவோஸில் நடைபெறும் வருடாந்த உலக பொருளாதார ஒன்றியத்தின் மாநாட்டின் ஆரம்பத்தில் உலக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam