மக்கள் சக்தி என்னவென்பதை விரைவில் காட்டுவோம்! வசந்த முதலிகே சூளுரை
ரணில் அரசின் முன் மண்டியிடத் தயாரில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எமது போராட்டம் தொடரும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
வசந்த முதலிகேவுக்கு எதிராகக் கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட 3 வழக்குகளிலும் அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் பிரச்சினை

அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மக்கள் மீது வரிகள் சுமத்தப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களின்
சம்பளப் பிரச்சினை தீரவில்லை. எனவே, இந்த அரசின் முன் மண்டியிட நாம்
தயாரில்லை. இது ஆரம்பம் மட்டுமே. மக்கள் சக்தி என்னவென்பதை விரைவில்
காட்டுவோம்"என தெரிவித்துள்ளார்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam