புதிய அணியிடம் ஆட்சியை ஒப்படைப்போம்! - ருவான் விஜேவர்தன
நிறுவனங்களின் விருப்பத்திற்கு அமைய விலைகளை கட்டுப்படுத்த அனுமதி வழங்கி விட்டு, அரசாங்கம் கறுப்பு கடை முதலாளியின் பாத்திரத்தில் நடித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன(Ruwan Wijewardena) தெரிவித்துள்ளார்.
‘‘சமையல் எரிவாயு, பால் மா, கோதுமை மா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளை கட்டுப்படுத்துவதில் இருந்து விலகி, பொருட்களின் விலைகளை தீர்மானிக்கும் உரிமையை மாத்திரமல்லாது, கட்டுப்படுத்தும் உரிமையையும் கறுப்பு கடை முதலாளிகளிடம் அரசாங்கம் வழங்கியுள்ளது‘‘ எனவும் அவர் கூறியுள்ளார்.
‘‘மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது வெறுப்படைந்துள்ளனர். மக்கள் புதிய அணியை கோருகின்றனர். அந்த அணி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருக்கின்றது.
இதனால், வேலை செய்ய முடியாத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப புதிய அணியுடன் புதியவர்களை தயார்ப்படுத்துவோம்‘‘ எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri