நம்பிக்கை இல்லா பிரேரணைகளுக்கு அஞ்சப் போவதில்லை
நாட்டின் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு அஞ்சப் போவதில்லை என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் எந்த ஒரு விடயத்தையும் பேசுவதற்கு முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனால் அவர்கள் இந்த விவகாரத்தை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் இரண்டாவது முக்கிய பதவியை வகிக்கும் பிரதமரை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கம் தயங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நம்பிக்கை இல்லா பிரேரணைகளை தோற்கடிக்கும் சக்தி அரசாங்கத்திற்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஒரு பெண் என்ற நிலையில் பல்வேறு இழிவுபடுத்தல்களை தாங்கிக் கொண்டு நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவை ஆற்றி வருகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமும் ஜனாதிபதியும் பிரதமருக்காக குரல் கொடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.