நாட்டு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தமாட்டோம்: சஜித் (photos)
நாட்டு மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசியல் பிழைப்பு நடத்தும் நோக்கம் தமக்கு இல்லை என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பொய்யான பாசாங்கு
மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பேருந்துக்களில் தங்கள் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் ஸ்டிக்கர்களாக ஒட்டி தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டாலும், 42 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பேருந்தையேனும் வழங்க அவர்களால் முடியவில்லை.
ஆனாலும், பாடசாலை மாணவர்களுக்கு நான் பேருந்து வழங்கும்போது, 'பஸ் மேன்' என்று என்னை அவர்கள் விமர்சிக்கின்றனர். எத்தகைய விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்களுக்கான சேவை நிறுத்தப்படாது.
மக்களுக்காக எதுவும் செய்யாது தம்பட்டம் அடிப்பவர்கள் எதையுமே செய்ய நினைப்பதில்லை. அவர்கள் பொய்யான பாசாங்குளைப் பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
