ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதில்லை: சஜித் தரப்பு திட்டவட்டம்
ஐக்கிய தேசிக் கட்சியுடன் , ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து கொள்ளாது என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ள தமக்கு எவ்வித அவசியமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களிடையே இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தல்
விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
யாரினதும் வாலாக செயற்படாது கீழ் மட்ட கட்சி உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தாம் இருக்கும் பக்கம் தோல்வியடையும் என சிலர் வெளியிடும் விமர்சனங்கள் பொறாமையின் வெளிப்பாடு எனவும் வெற்றி தோல்வி என்பது மக்களின் கைகளில் உள்ள விடயம் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




