ரணில்- சஜித் தரப்பிற்கு இடையிலான இணக்கப்பாடு தொடர்பில் நளின் பண்டார வெளியிட்டுள்ள உறுதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புடன் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என சஜித் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சஜித் பிரேமதாச எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணிலுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இணக்கப்பாடு
ரணில் – சஜித் தரப்புக்களுக்கு இடையில் இணக்கப்பாடு என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் இந்த வதந்திகளை பரப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்திற்கு காணப்படும் ஆதரவு காரணமாக தேசிய மக்கள் சக்தியும் இவ்வாறான பிரசாரத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் இணக்கப்பாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எட்டப்படாது என்பதை உறுதிப்படக்கூற முடியும் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 18 மணி நேரம் முன்

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
