ரணிலுடன் பேசிய காணொளியை, அவர்களின் சகாக்களே பகிர்ந்துள்ளனர் : மரிக்கார் குற்றச்சாட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் கலந்துரையாடியதைக் காட்டும் காணொளி, ஜனாதிபதியின் சகாக்களால் வேண்டுமென்றே வெளியிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (Saidulla Marikkar) தெரிவித்துள்ளார்.
விக்ரமசிங்க அரசியல் ரீதியில் வங்குரோத்து அடையப் போகிறார் என்ற நிலையில், சமூக ஊடகங்களில் இந்த காணொளியை பரப்பியுள்ளதாக மரிக்கார் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரம்
பிலியந்தலையில் அண்மையில் நடைபெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில், தாம் விக்ரமசிங்கவைச் சந்தித்ததாக குறிப்பிட்ட மரிக்கார், கார் அனுமதிப்பத்திரம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்” நிதியமைச்சராக இருக்கும் அவர், இந்த அனுமதிகளில் கையெழுத்திடலாம் தாம் இதன்போது ஆலோசனை தெரிவித்ததாக மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் சிவப்பு யானைகளும்( தேசிய மக்கள் சக்தி) இந்த காணொளியை எல்லா இடங்களிலும் பகிர்ந்து வருவதாக மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ரணில் விக்ரமசிங்க மற்றும் மரிக்கார் ஆகிய இருவரும் அந்த காணொளியில் தேசிய மக்கள் சக்தியை விமர்சிக்கும் ஒலி ஒளிப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
