பண்டிகைக் காலங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படாது – விவசாய அமைச்சர்
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் அரிசி பற்றாக்குறை ஏற்படாது என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த உறுதிப்படுத்தியுள்ளார்.
அரிசி பற்றாக்குறை ஏற்பட்டால், அதை சமாளிக்க அரசு இறக்குமதி கொள்கையை பின்பற்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல், கடந்த நாட்களில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டபோது அரசாங்கம் அதனை இறக்குமதி செய்தமை குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது அடிப்படை கொள்கை இறக்குமதி செய்வதை விட உற்பத்தியை அதிகரிப்பதேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அரிசி பற்றாக்குறை ஏற்பட்டால், நாம் இறக்குமதிக்கு செல்வதே தவிர வழியில்லை," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் ஏற்பட்ட உரப் பற்றாக்குறை காரணமாக அரிசி பிரச்சினை தோன்றியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri

நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல் Cineulagam
