சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியேறுவோம் : பிமல் தகவல்
சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியே வருவோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத் திட்டத்தில் இருந்து கொண்டே அரச சேவையை பலப்படுத்த முடிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம்
தற்போதைய அரசாங்கத்திற்கு அனுபவமில்லை என பலர் குற்றம் சுமத்தினாலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையின் கீழ் எந்தவொரு சவாலையும் வெற்றிகொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிக்கு நேரடியாகவே கூறியுள்ளார் என பிமல் ரட்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri