புதிய சட்டங்களை உருவாக்கி இனவாதத்தை களைவோம்: ஜனாதிபதி உறுதி
நாட்டில் புதிய சட்டங்களை உருவாக்கி இனவாதத்தை களைவோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், திஸ்ஸ விகாரை பிரச்சினையில் இருப்பது இனவாதம். இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். தற்போது உள்ள சட்டங்கள் இனவாதத்தை ஒழிக்க போதாது.சட்டங்களை புதிதாக உருவாக்கி இனவாதத்தை களைவோம்.
இனவாதம்
எமது பரம்பரை யுத்தம் செய்தது. ஆனால் அடுத்த பிள்ளைகளின் பரம்பரைக்கும் அதனை விடமாட்டோம். பிரிவினை வாத அரசியல் முடிவிற்கு வந்தது. இழந்த ஒற்றுமையை நிச்சயம் கட்டி எழுப்புவோம்.இனவாதத்தை இல்லாமல் செய்து தேசிய ஒற்றுமையை வளர்ப்போம்.
தற்போது போர் முடிந்து 16 வருடங்கள் கழிந்துள்ளது. இன்னும் அதன் மிச்ச சொற்பங்கள் இருக்கின்றன.
யாழில் திஸ்ஸவிகாரை தொடர்பாக ஒரு பிரச்சினை இருக்கிறது. அது என்ன பிரச்சனை. அந்த காணிகளின் உரிமையாளர்களும், பன்சாலையின் பிக்குமாருக்கும் அந்த பிரச்சனையை தீர்க்க இடமளித்தால் அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள்.
தீர்க்க இடமளிக்காமல் இருப்பது அரசியல். அவர்களுக்கு தேவை இதனூடாக இனவாதத்தை தூண்டுவது. இதன் காரணமாகவே தீர்க்க முடியாமல் உள்ளது.
புதிய சட்டம்
வடக்கின் தோல்வி கண்ட அரசியல்வாதிகள் அந்த இடத்திலே ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்த முனைகின்றனர். தென் பகுதியில் தோல்வி கண்ட அரசியல் தலைவர்கள் அங்கே ஒரு முரண்பாட்டை ஏற்படுத்த முனைகிறார்கள்.
நாங்கள் காணி உரிமையாளர்கள், பிக்குமார்கள் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவோம். இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.
தற்போது உள்ள சட்டங்கள் இனவாதத்தை ஒழிக்க போதாது. சட்டங்களை புதிதாக உருவாக்கியாவது இனவாதத்தை களைவோம் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam
