நீதி கிடைக்கும் வரை போராடிக் கொண்டே இருப்போம் : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் (Videos)
எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி மூன்று வருடங்களிற்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
எனினும் எமக்கான நீதியினை இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை. எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்கவில்லை.
எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம்.
அத்துடன் முல்லைத்தீவில் ஊடகவியலாளரை இராணுவத்தினர் தாக்கியமை அநீதியான செயற்பாடு.
மக்களின் பாதுகாப்புக்காகவே இராணுவம் நிலைகொண்டுள்ளதாக கூறி தமிழ் மக்களை பாதிக்கும் செயற்பாடுகளையே இந்த இராணுவம் முன்னெடுத்து வருகின்றது. எனவே அதனையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, நிதி வேண்டாம் நீதியே வேண்டும், ஓம்பியை திணிக்காதே, பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, அரசின் பொறுப்பற்ற பதில்களை கண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
செய்தி - பாலநாதன் சதீஸ்
யாழ்பாணம்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 9.30 மணியளவில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போராட்டம் நடைபெற்ற பகுதியில் பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
செய்தி - கஜி
கிளிநொச்சி
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 1741 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - யது பாஸ்கரன்

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
