இந்தியாவுடனான நெருங்கிய உறவுகளை மதிக்கின்றோம் - அரசாங்கம்
இந்தியாவுடனான நெருங்கிய உறவுகளை மதிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ரமேஸ் பத்திரன இந்த விடயத்தை இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறித்த விடயத்திலும் அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மேற்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கிழக்கு முனையம் மூலோபாய ரீதியில் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தினால் இதனை அபிவிருத்தி செய்யும் பணிகளை வேறும் தரப்பினருக்கு வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்தது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
