வியாபார ஆக்கிரமிப்பக்களுக்கு உள்வாங்கப்படும் தமிழ் மக்கள்: கவலை வெளியிடும் வடக்கு ஆளுநர்
சர்வதேச ரீதியாக நடைபெறுகின்ற பல்வேறு வியாபார ஆக்கிரமிப்பக்களுள்ளே தமிழ் மக்களாகிய நாங்கள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச சபையில் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், ஒரு கால கட்டத்திலே தலை நிமிர்ந்து நின்ற சமுதாயம் என்று மீண்டும் சமூகத்திற்கு நிரூபித்து காட்ட வேண்டும் என்பது தான் எங்களுடைய எதிர்பார்ப்பு ஆகும்.
நாங்கள் சர்வதேச ரீதியாக நடைபெறுகின்ற பல்வேறு வியாபார ஆக்கிரமிப்பக்களுள்ளே எங்களை நாங்கள் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை விற்பனை செய்கின்ற முகவர்களாக தான் நாம் மாறுகின்றோம்” என்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |