அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள அறிவுறுத்தல்

Mahinda rajapaksa
By Independent Writer Sep 04, 2021 01:30 PM GMT
Report

ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.

மொனராகலை, சிரிகலவில் அமைக்கப்பட்டுள்ள ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில், அலரி மாளிகையிலிருந்து காணொளி தொழிநுட்பம் ஊடாக கலந்து கொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச ராஜபுர வைத்தியசாலையை வைபவ ரீதியாகத் திறந்து வைத்ததுடன், அங்கு கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொண்டுள்ளார்.

தொற்றா நோய்கள் பலவற்றிற்குச் சுதேச வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கும் மொனராகலை ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலை, நாற்பது நோயாளர்கள் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏற்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

இவ்வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் தங்கி சிகிச்சை பெறும் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட மத குருமார்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கப்படும்.

வைத்தியசாலையின் திறப்பு விழாவில் வெல்லவாய சிறி பியரதன வித்யாயதனயவின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய கந்தஉட பங்குவே சுதம்ம தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

ராஜபுர ஆயுர்வேத வைத்தியசாலை திறப்பு விழாவில் காணொளி தொழிநுட்பம் ஊடாக கலந்து கொண்டு பிரதமர் கருத்து தெரிவிக்கையில், சுதேச மருத்துவத்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச மக்களின் நலனுக்காக மேலும் ஒரு படி முன்னேற்றும் இவ்வாறானதொரு நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அரசாட்சிக்கும், மருத்துவத்திற்கும் திறமையான மன்னர்கள் இருந்த பெருமைக்குரிய வரலாறு எமக்குள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எமது முன்னோர்கள் பாதுகாத்த, எமது சுதேச சிகிச்சை முறைகளை அவ்வாறே எமது எதிர்கால தலைமுறையினருக்குப் பாதுகாத்துக் கையளிப்பது போன்றே அதனைச் சர்வதேசத்திற்கு அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நாம் நம்புகின்றோம்.

அதற்காக சுமித் ராஜபுர போன்ற சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற எமது நாட்டின் சுதேச வைத்தியர்கள் முன்னெடுக்கும் இவ்வாறான செயற்பாடுகளை ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எப்போதும் பாராட்டுகின்றோம்.

சுதேச வைத்தியம் என்பது எமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அன்று மேற்கத்தேய வைத்திய முறை பிரசித்தி பெறாத காலப்பகுதியில் சுதேச மருத்துவத்தின் மூலமே மக்கள் பூரணமாகக் குணப்படுத்தப்பட்டனர்.

எவ்வாறான நோய்களுக்கும் அன்று கிராம நாட்டு வைத்தியர்களினாலேயே ('வெத மஹத்தயா') சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்றும் நாட்டு வைத்திய பரம்பரையில் உருவாகிய நாட்டு வைத்தியர்கள் காணப்படுகின்றனர். அதேபோன்று அதற்கு மேலாக முன்னேறிய ஆயுர்வேத வைத்தியர்களும் உள்ளனர்.

இதன் முக்கியத்துவத்தை முன்கூட்டியே அறிந்தவர்களாகவே சுதேச மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு இராஜாங்க அமைச்சொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம்.

நாம் அறிந்த வகையில் அந்த அமைச்சினால் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பதிவுசெய்யப்பட்ட சுமார் இருபதாயிரம் வைத்தியர்களின் விபரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவம் இக்காலப்பகுதியில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று வருகிறது. அதன் மூலம் நாம் உச்ச பயனைப் பெற வேண்டுமாயின் தற்போதிலிருந்தே அதற்குத் தயாராக வேண்டும்.

பார்கின்சன், பக்கவாதம் போன்ற நரம்பியல் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சுதேச வைத்திய மத்திய நிலையமொன்றை நமது நாட்டில் உருவாக்க நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம்.

இன்று திறக்கப்பட்டுள்ள ராஜபுர வைத்தியசாலையில் சுதேச வைத்தியம் போன்றே ஆயுர்வேத மருத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என எமக்கு அறியக் கிடைத்தது. இவ்வைத்தியசாலையிலும் பல தொற்றா நோய்களுக்குச் சிகிச்சை வழங்க முடியும் என அவர்கள் கூறியுள்ளனர்.

அதனால் எதிர்காலத்தில் சுதேச சிகிச்சை முறைகளைத் தேடி வரும் வெளிநாட்டவர்களுக்கும் இவ்வாறான வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கான வசதி கிட்டும்.

மருத்துவ குணம் கொண்ட மரங்கள், இலைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் நச்சற்ற உணவு பண்டங்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுக்கும் உலகளாவிய ரீதியில் அதிக கேள்வி காணப்படுவதை நாம் மறந்துவிடக் கூடாது.

அந்த கேள்வியை வெற்றி கொள்ள முடியுமாயின் அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப் பெரிய பலமாகும். இன்று உண்மையில் சரியான வைத்தியரைத் தெரிவுசெய்வதில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

சிலர் வைத்தியர்கள் போன்று போலியாகச் செயற்பட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். மேலும் சிலர் தமது கல்வியறிவுடன் தொடர்பற்ற நோய்களுக்குச் சிகிச்சை அளித்து நோயாளர்களைத் துன்பத்தில் தள்ளுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் சமூகத்திலிருந்து விலக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

அதேபோன்று சுதேச வைத்தியம், ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், அதன் முடிவுகளை உலகிற்கு எடுத்துரைப்பதற்குத் திட்டமொன்றைத் தயார்ப்படுத்துமாறும் நாம் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம்.

அதனால் இதுவரை கண்டிராத ஒரு தரத்தை இவ் அனைத்திலும் காணக் கிடைக்கும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

அன்று சுதேச மருத்துவம் பணத்தை எதிர்பார்த்து மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயமல்ல. நான் அறிந்த வகையில் பௌத்த பிக்குமார் உள்ளிட்ட மத குருமார்களுக்கு இவ்வைத்தியசாலையில் இலவசமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதனை ஒரு மகத்தான செயற்பாடாக நாம் அனைவரும் பாராட்டுகின்றோம் என்பதையும் இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மஉதயசாந்த குணசேகர, ராஜபுர மருந்தாக்கற் பொருட்கள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் ராஜபுர உள்ளிட்ட ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US