சமூகங்களுக்கிடையில் சமூக கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டும் : ஜீவன் தியாகராஜா (Photos)
சமூகங்களுக்கிடையில் நல்லுறவையும் ஏனைய மதங்களுக்கிடையிலான நல்லொழுக்கங்களையும் பின்பற்றுகின்ற சமூக கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று (24) இடம்பெற்ற நோன்பு திறக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இஸ்லாமிய மதங்களின் புனிதத் தன்மையும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கின்ற
நற்பண்பினை இஸ்லாமிய மரபு நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
அவ்வாறான மனிதத்தன்மையினை போற்றுகின்ற தலைமுறையினர் எதிர்காலத்தில் முன்வரவேண்டும் அது காலத்தின் அவசியம்” என தெரிவித்துள்ளார்.
இதன்போது இஸ்லாமிய குரானின் புனிதம், இப்தார் நோன்பின் முக்கியத்துவம் பற்றி மௌலவிமார்கள் உரை நிகழ்த்தியுள்ளனர்.
மேலும், சர்வமதத்தலைவர்கள், சிவில் சமூக அமைப்பினர், வர்த்தக தொழிற்துறை மன்றத்தினர்கள், கல்வியாளர்கள், சமயத்தலைவர்கள், உள்ளிட்ட பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








